R.Tharaniya / 2025 ஜூன் 10 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) அன்று காலை தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள நீரோடையில் கவிழ்ந்துள்ளது.
கொழும்பு பகுதியில் இருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி வந்த வேன் ஒன்றே இவ்வாறு தலைகீழா கவிழ்ந்துள்ளது.வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
வேனில் பயணித்தவர்கள் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்



31 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago
9 hours ago