2025 ஜூலை 16, புதன்கிழமை

ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தம்

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தரநிர்ணயக் குழுவால் தரக் காப்புறுதி வழங்கப்படும் வரை இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இன்று பகல் போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவுக்கும் ஓட்டோ சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோக்களுக்காக மீற்றர் பொருத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு கொண்ட வரப்படும் மீற்றர்கள் குறித்து உரிய தரமில்லையென கிடைக்கப்பெற்ற முறைபாடுகளை கவனத்தில் கொண்டு, மீற்றர்களின் நிலைக் குறித்து தர நிர்ணய அலுவலகம் ஊடாக கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிமல் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .