2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்லும் முன்னாள் எம்.பிக்கள்

Janu   / 2025 ஜூலை 21 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து  ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு செய்ய முடிவு எடுத்துள்ளன.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே,“ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் நியாயமற்ற முடிவு என்று கூறி தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் வயதான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த முடிவால் பெரும் சிக்கலில் சிக்குவார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் ஓய்வூதியத்தை இரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .