2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது’

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ரூபாயின் மதிப்பு சரிவினால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 50% குறைந்துள்ளதுடன், ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று (5) விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதனை கூறினார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே எங்கள் திட்டம். இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 60% ஆக உயரும். உலகில் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும். தற்போதைய பணவீக்கத்தால், ரூபாயின் மதிப்பு சரிவினால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 50% குறைந்துள்ளதுடன், ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது. 

இந்த நிலை நமது மூத்த குடிமக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் அனைவரிடத்திலும் ஏழ்மை பரவி வருகிறது. அவர்கள் பெறும் பணத்தின் மதிப்பு 50% குறைந்துள்ளது. அவர்களின் வாங்கும் திறன் சுமார் 50% குறைந்துள்ளது. நேர்மறையான கருத்துக்களை முன்வைப்பது எளிது. ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு விடை காண்பது கடினம்.

இதற்கு என்ன தீர்வு? கூடிய விரைவில் ரூபாயை நிலைப்படுத்துதல், வீழ்ச்சியடைய விடாமல் ரூபாயை வலுப்படுத்துதல். அந்த நோக்கத்திற்காக, எதிர்காலத்தில் பணம் அச்சிடுவதை மட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .