2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கொடிகாரவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு

Thipaan   / 2016 ஜனவரி 18 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாண சபை முன்னாள் அமைச்சர் உபாலி கொடிகாரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் மார்ச் மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வைத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக மேல்மாகாண சபை முன்னாள் அமைச்சர் உபாலி கொடிகாரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, சாட்சியாளர்கள் சமூகமளிக்காததால் எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதைத்தவிர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, நீதிமன்ற கட்டளைகளை மதிக்காது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கொடிகாரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கும் அதே தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X