2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கூட்டு எதிரணி உருகுகிறது: அமைச்சர் ரஞ்சித்

Thipaan   / 2016 ஏப்ரல் 07 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

'கூட்டு எதிரணியைச் சேர்ந்த இருவர், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து, கூட்டு எதிரணி உருகிக்கொண்டிருக்கின்றது' என்று பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கூட்டு எதிரணியைச் சேர்ந்த இன்னும் சிலர், அரசாங்கத்துடன் விரைவில் இணைந்துகொள்வர். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிகொத்தாவில், நேற்று வியாழக்கிழமை நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'நாட்டின் பொருளாதாரம் உயர்வடைந்து வரும் நிலையில், உழைக்கும் மக்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு மேலும் பல வரப்பிரசாதங்களை கொடுக்கும் நோக்கில் இந்த மே தினத்தை ஏற்பாடு செய்துள்ளோம். 'அரச, தனியார் துறையினருக்கான கொடுப்பனவுகள் உயரவில்லை. ஆனால், நல்லாட்சியில் அரச உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இவர்களுக்கான கொடுப்பனவை 10,000 ரூபாயாக உயர்த்த முயற்சிப்போம்' என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X