2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கூட்டு எதிரணியினர் ஜனாதிபதியை சந்திப்பர்

Kanagaraj   / 2016 ஜனவரி 06 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்புப் பேரவையை தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ள கூட்டு எதிரணியினர், தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர் என்று, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் எம்.பியுமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இம்மாதம் 09 ஆம் திகதி கூடும்போது, சகல உறுப்பினர்களும் அடங்கிய அரசியலமைப்பு பேரவை நிறுவுவது தொடர்பில், அரசாங்கத்தினால் பின்பற்றும் நடைமுறை தொடர்பில், கூட்டு எதிரணியினர் அதிருப்தி கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பொரளையில் உள்ள என்.எம். பெரேரா மையத்தில், நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் முன்னெடுக்கவிருக்கின்ற இந்த நடைமுறை தொடர்பில், கூட்டு எதிரணியினர், செவ்வாய்க்கிழமை கூடி, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் மாறுபட்டதாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X