Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 19 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரி. பாருக் தாஜுதீன்
இலங்கையில் அனுமதிக்கப்பட்ட கசாப்பு மடுவங்களில் கைக்கொள்ளப்படும் மனிதாபிமானமற்ற, கொடூரமான இறைச்சியாக்கும் முறைகளைத் தடுக்கக்கோரி, சுவர்ணதாஸ போபிட்டிய என்பவர், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், ஆணைகோரும் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் நீதியமைச்சரும், பௌத்த விவகார அமைச்சரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இறைச்சிக்காக மாடுகளைக் கொல்லும்போது, தெமட்டகொடை பேஸ்லைன் வீதியிலுள்ள மடுவம் உட்பட நாட்டின் பிரதான நகரங்களிலுள்ள மடுவங்களில் காலத்துக்கு ஒவ்வாத இரக்கமற்ற முறைகள் கடைப்பிடிக்கப்படுவதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்ப்பமுற்ற பசுக்களும் அடித்துக் கொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கழுத்தறுக்கும் இயந்திரமான கில்லட்டின் மற்றும் முன்னேறிய நுட்பங்களைப் பயன்படுத்தி, மனிதாபிமான முறைகளில் ஆகக் குறைந்த நோவுடன் இறைச்சியாக்கும் முறைகளை அதிகாரிகள் அறிமுகம் செய்யவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
தெமட்டக்கொடை கசாப்பு மடுவத்தில், இப்போதும் சுத்தியலால் அடித்து மாடுகள் கொல்லப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாடுகளை இறைச்சியாக்குவதில் தனது முன்மொழிவுகளை அமுலாக்கினால், குறைந்த பட்சம் இரண்டு கிலட்டின் வெட்டிகளைத் தரமுடியுமென மனுதாரர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .