Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றவாளியொன்று சந்தேகிக்கப்படுபவர், வாக்குமூலமளித்துள்ளதை மாத்திரம் கருத்திற்கொண்டு அவரை குற்றவாளியொன்று குறிப்பிடமுடியாது என்று பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேர தெரிவித்துள்ளார் .
ஒரு குற்றம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு எது உண்மை என்பது நிரூபிக்கப்படும் வரை, சந்தேகிக்கபடுபவரின் வாக்குமூலம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார் .
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் 'கொண்டையா' தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
வாக்குமூலமளிப்பதன் மூலம் ஒருவர் குற்றவாளியொன்று கருதப்படமாட்டார் என்றும் துனேஷ் பிரியஷாந்த தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் ஒரு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் என்ற ரீதியில் நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார் . மேலும் துனேஷ் பிரியஷாந்த, வாக்குமூலத்தை மட்டுமே அளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார் .
குற்றத்துக்கு அப்பால் காணப்படும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்படும் உண்மைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களுமே ஒரு வழக்குக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
18 May 2025
18 May 2025