Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனவர்களைப் பற்றிய பணியை ஆற்றுவதற்கு, தனது ஆணைக்குழுவை விடச் சிறந்தவர்கள் வேறு யாரும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான விசாரணை அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்து உரையாற்றிய ஹுஸைன், 'முன்னைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, அதனது நம்பகத்தன்மை, பயன்தருநிலை போன்றவை பற்றிய கேள்விகளுக்கு மத்தியிலும் தனது பணியைத் தொடர்ந்து வருகின்றது. இந்த ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டுமெனவும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஆலோசனையோடு உருவாக்கப்படும் நம்பகத்தன்மையும் சுயாதீனமானதுமான நிறுவனமொன்றுக்கு, ஆணைக்குழுவிடம் காணப்படுகின்ற விடயங்கள் மாற்றப்பட வேண்டுமெனவும் நாம் எண்ணுகிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், பதிலளித்துள்ள பரணகம, 'எங்களுடைய செயற்பாட்டில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடனேயே காணப்படுகின்றோம். மக்கள் வாக்குமூலங்களை வழங்கும் போது, இராணுவப் படைகளோ அல்லது பொலிஸ் அதிகாரிகளோ அந்த அறைகளுள் காணப்பட்டதில்லை' எனத் தெரிவித்த அவர், வடக்கு - கிழக்கிலிருந்து 16,000 பேர் உள்ளடங்கலாக 19,000 பேரினது வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
விசாரணைகள் குறித்த அழைப்பு விடுக்கும் போது, அதற்கான வரவேற்பு அதிகமாகக் காணப்பட்டதாகக் குறிப்பிடும் அவர், ஓர் அமர்வுக்கு 300 பேரை அழைத்தால், 1,000 பேர் பங்குபெற வந்திருப்பர் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, அவர்களில் ஒருவர் கூட திருப்பியனுப்பப்பட்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 'அமர்வுகள் பிந்திய நேரங்களில், மக்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் செல்வதற்காகப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது' என, அவர் மேலும் தெரிவித்தார்.
'முறைப்பாட்டாளர்களது முறைப்பாடுகள் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற, புலனாய்வு செய்யும் அணியினரை அவர்களது வீடுகளுக்கு அனுப்பினோம். அவர்களுடைய முறைப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு எழுதியனுப்பினோம். புனர்வாழ்வு விடயம் தொடர்பாகவும் நாங்கள் கேட்டறிந்ததோடு, அதிகாரிகளது பதில்கள் தாமதமானவையாகவோ அல்லது முறையானவையாகவோ இல்லாதவிடுத்து, அதற்கு நடவடிக்கை எடுத்தோம்' என அவர் குறிப்பிட்டார்.
'இதை விட நாம் என்ன செய்ய முடியும்? எம்மை விடச் சிறந்த பணியை, வேறு எவரும் செய்ய முடியும். எங்களுடைய பணியின் பாரியளவிலான தன்மை குறித்து மக்கள் உணர வேண்டும். முடிவுகளைக் காண்பிப்பதற்கு, காலமெடுக்கும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ram Friday, 02 October 2015 03:11 AM
Totally false statement by the Commissioner.Many effected people complained that the inquiring team asked question like have you received goats, cattle, any relief assistant from gov. instead of their complains about missing/killed person.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago