2025 மே 19, திங்கட்கிழமை

கிரிக்கெட் விளையாடிய இளைஞன் பலி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) மாலை மின்சாரம் தாக்கி பலியான இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

குறித்த இளைஞன், நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய சந்தர்ப்பத்திலேயே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஓர் ஆண்டெனா வயரின் ஊடாக, கிரிக்கெட் விளையாடிய போது தூர வீசப்பட்ட பந்தை எடுக்க முயற்சித்த போதே இளைஞன் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பதுளை பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட 18 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
உடல், மாரவில வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை இன்று (05) இடம்பெறவுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X