2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குருநாகல் - ஹபரணைக்கு புகையிரத சேவை

Menaka Mookandi   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலில் இருந்து ஹபரணைக்கு புகையிரத சேவையை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் வெகு விரைவில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறினார்.

குருநாகல் - தம்புளை வீதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக? தம்புளை, கலேவெல, ஹபரண, பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான விவசாயப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு இலகுவாக்கவுமே இந்த புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்களுக்கான புகையிரதச் சேவையில் நிலவும் தாமதத்தை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X