2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

காற்றில்லா 'மே'

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே மாதக் காலப்பகுதியில், காற்றின் வேகம் குறைந்து காணப்படும் என்றும் இதன் காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையான வெப்பத்துக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மே மாதம் முடியும் வரை, நாட்டில் ஈரப்பதன் காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தினாலேயே கடுமையான வெப்பம் காணப்படும் என்று குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

எனினும், தற்போது நாட்டில் காணப்படும் வெப்பமான காலநிலை, மே மாதமளவில் குறைவாக இருக்கும் என்றும் ஆனால், குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மாத்திரம் வெப்பநிலையின் அளவு அதிகரிக்கும் என்றும், குறித்த திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை (16) அநுராதபுரத்தில் 36.4 பாகை செல்சியஸாக இருந்த வெப்பநிலை, 37 பாகை செல்சியஸாக அதிகரிக்கும். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) 32 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டது. இது, எதிர்வரும் காலத்தில் 34 பாகை செல்சியஸாக அதிகரிக்கவுள்ளது.  

இதேபோல, இரத்தினபுரி - 34.9 பாகை செல்சியஸிருந்து 36க்கும், காலி - 32 பாகை செல்சியஸிலிருந்து 35க்கும், யாழ்ப்பாணம் - 35 பாகை செல்சியஸிருந்து 36க்கும் அதிகரிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .