2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குற்றவியல் சட்டத்தை திருத்த அங்கிகாரம்

Kanagaraj   / 2016 ஜனவரி 21 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

குற்றம் ஒன்றைச் செய்தார் என்று சந்தேகிக்கப்படும் நபரொருவருக்கு, வழக்கறிஞர் ஒருவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை தொடர்புடைய, 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவால் தாக்கல்செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரமளிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தைச் செய்தார் என்று சந்தேகிக்கப்படுபவருக்கு, வழக்கறிஞர் ஒருவருடைய உதவியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. அதனடிப்படையில், கைது செய்யப்பட்ட நபரிடத்தில் இருந்து, வாய் மூல வாக்குமூலத்தைப் பொலிஸார்
பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த நபர், வழக்கறிஞர் ஒருவருடைய உதவியை நாடலாம். எனவே, பொலிஸார்
வாக்குமூலம் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் போன்று, குறித்த நபருக்கு வழக்கறிஞரின் உதவியைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

அதேபோன்று, குறித்த சந்தேகநபருக்கு வழக்கறிஞர் ஒருவரை நாடுவதற்கு வசதிகள் ஏதும் இன்றேல், அதற்கான ஏற்பாடுகளை, சட்ட உதவி ஆணைக்குழுவின் வழக்கறிஞரின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதற்காக வேண்டி, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X