2025 மே 19, திங்கட்கிழமை

குவைட் செல்ல முயற்சி: 11 பேர் கைது

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விஸாவில் குவைட் நாட்டுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் 11 பேர்,  நாட்டுக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்ட நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று குடிவரவு,குடியகழ்வு திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

அவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதுடன் ,அவர்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இருப்பதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.  

இதேவேளை, ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்டிருக்கின்ற தாய்மார்கள், சட்டவிதிமுறைப்படி வெளிநாட்டுக்கு வேலைபெற்றுச்செல்ல முடியாது  என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

இவ்வாறானவர்கள் சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X