Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 23 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது கச்சதீவு இலங்கைக்கு சொந்தமாகி விட்டதால் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்தோனியார் தேவாலய திருவிழாவில் இலங்கை தூதரகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் கச்சதீவுக்கு செல்ல மாட்டார்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 67 படகுகளையும் திருப்பி ஒப்படைக்காததால் இந்த திருவிழாவை நாங்கள் புறக்கணிப்போம்.
தமிழகத்தில் இருந்து கச்சதீவு திருவிழாவுக்கு செல்பவர்கள் யாருக்கும் எங்கள் படகுகளை வாடகைக்கும் விடமாட்டோம் என மீனவர்கள் சங்கத் தலைவர்கள் தேவதாஸ் மற்றும் எஸ்.எமிரெட் ஆகியோர் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
இதேபோல், படகுகளை விடுவிக்கும் கோரிக்கையுடன் நாளை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யவும், எதிர்வரும் 26ஆம் திகதி உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .