2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘கசை’ அடிப்பவர்கள் ‘தலை’ தூக்குகின்றனர்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் எப்போதும் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவர் என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, எம்.பி. உங்களுக்கு நினைவிருக்கலாம் இந்த ஆட்சியாளர்கள் அவ்வாறனதொரு சிக்கலுக்கு மத்தியில் தான் அதிகாரத்துக்கு வந்தனர் என்றார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இவர்களின் ஆட்சிக்கு முதல், நாட்டில் மலட்டு தன்மையை ஏற்படுத்தும் கொத்து, மலட்டு தன்மையை ஏற்படுத்தும் வைத்தியர் என போலி செய்திகளை உருவாக்கினார்.

இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. அது இந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு காரணமாக அமைந்துது. பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் தமக்கான குழியை வெட்டிக் கொண்டனர். அதாவது இந்தத் தாக்குதல், அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தந்திரமாக இருக்கலாம் என சமூக கருத்தொன்று உருவாகியுள்ளது என்றார்.

அதேப்போல் இந்த தாக்குதலின் போது கத்தோலிக்க மக்களின் எதிர்ப்புகளை கட்டுபடுத்தி,
பாரிய பொறுப்பை பேராயர் ஆற்றினார். ஆனால், தாம் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதாக
​பேராயர் இன்று உணர்ந்துகொண்டார்.

ஆட்சியாளர்கள் தோல்வியடையும் ஒவ்வாரு தடவையும், மதவாதம், இனவாத்த்துக்கு
ஒளிந்துக்கொள்வர். அதற்காக ஒருவரின் தோளில் ஒளிந்து கொள்வர். அவ்வாறு
ஒளிந்துக்கொள்ள உதவிய ஒருவர், கடந்த காலங்களில் காணாமல் போயிருந்த நிலையில்
மீண்டும் முன்னோக்கி வந்துள்ளார்.

பெரஹரா காலங்களில், நடனக்குழுவினருக்கு முன்பாக அல்லது இடையிடையில் கசை
அடிப்பவர்களே இவ்வாறு தலையைத் தூக்கத்தொடங்கிவிட்டனர். இதன்மூலம் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் இரண்டாவது திட்டம் ஒன்றுக்கு தயாராகி
வருகின்றமை புரிகின்றது. அதுமாத்திரமன்று இவ்வாறு ஒளிந்திருந்த நபர், தாக்குதல் ஒன்று
இடம்பெறபோவதாக பாரிய கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும் இதுவரை அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் இல்லை. எனவே இது அரசாங்கத்தால் வழிநடத்தப்படுவதாக மக்களுக்கு சாதாரண சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது என்றார்.

எனவே நாட்டில் போதமான அளவு இரத்த ஆறு ஓடிவிட்டது. இந்த நாட்டில் மீண்டும்
அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு முன்னோக்கி வாருங்கள் என சகல
மதத்தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X