Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 16 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘கிளப் வசந்த’ என்றழைக்கப்படும் சுரேஷ் வசந்த பெரேரா, அத்துருகிரியவில் ஜூலை 8ஆம் திகதியன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய சடலம் அடக்கம் செய்யப்பட்ட தினத்தன்று, கஞ்சிபானி இம்ரானின் பிறந்த தினம் கடலில் கொண்டாடப்பட்டுள்ளது.
பிரான்ஸூக்கு தப்பிச்சென்று தலைமறைவாகி இருந்துக்கொண்டு, இந்நாட்டில் தன்னுடைய சகாக்களை பயன்படுத்தி மனித படுகொலைகளை முன்னெடுக்கும் கஞ்சிபானி இம்பரானின் 38ஆவது பிறந்தநாளே கடலில் கொண்டாடப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட படகை நடுகடலுக்கு கொண்டுச்சென்று, கேக் ஒன்று வெட்டப்பட்டுள்ளது என, இத்தாலியில் உள்ள எமில் ரொஹான், தொலைப்பேசியின் ஊடாக, எமது சகோதர பத்திரிக்கையான லங்காதீபவுக்கு திங்கட்கிழமை (15) தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
பாதாள உலகக்கோஷ்டியினரின் துப்பாக்கி பிரயோகத்தில் மரணமடைந்த ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேஷ் வசந்த பெரேராவுக்கு இறுதி கிரியைகள் நடைபெற்ற தினமே, கஞ்சிபானி இம்ரானின் 38 ஆவது பிறந்த நாளாகும்.
இந்நிலையில், ‘கிளப் வசந்த’வை படுகொலைச் செய்வதற்கு, டுபாயில் தலைமறைவாகி இருக்கும் லொக்கு பெட்டி என்பவருக்கு கஞ்சிபான் இம்ரானே குத்தகையை வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago