Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 21 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இயங்கும் கூட்டு எதிரணியுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரியவருகிறது.
மக்கள் சேவகர்கள் கட்சியை ஸ்தாபித்த அமரசிங்க, தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேசியுள்ளார்.
அச்சந்திப்பில், கூட்டு எதிரணியுடன் சேர அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவர், கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி, புதிய கட்சியைத் தோற்றுவித்தார். அத்துடன் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதற்கு அவர், ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .