R.Maheshwary / 2021 ஜூலை 04 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுரைச்சோலைப் பிரதேசத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, இடைநடுவில் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், இராணுவ கப்டன் ஒருவர் உள்ளிட்ட 4 இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என, ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இராணுவ வீர்ர்கள் நால்வரும் கல்லாறு இராணுவ முகாமுக்கு இணைவாக கடமையாற்றுபவர்கள் என்றும், இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago