2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘ கடந்த கால சூழ்நிலைகளே மதுஷ் போன்றவர்கள் உருவாகக் காரணம்’

Editorial   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த கால சூழ்நிலைகளே மதுஷ் போன்றவர்கள் உருவாகக் காரணம் என்றும், 2015ஆம் ஆண்டிலேயே போதை சமூகம் ஒன்று காணப்பட்டதுடன் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டுக்குள் பாதாள குழு தலைவர்கள் இருக்கவில்லை என்று அபிவிருத்தி பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பாதாளக் குழுவின் தலைவர் மதுஷைக் கைது செய்தமை பரந்த செயற்பாட்டின் கிடைத்த பலன் என்றும், அதன் கௌரவம் சகல தரப்பினரையும் சாரும் என குருநாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மது​ஷ் கைது செய்த சம்பவத்தின் வெற்றியானது ஒருவர் அல்லது இருவருக்கு மாத்திரம் உரியதல்ல என்றும், நீண்ட கால வேலைத்திட்டத்தின் பலனே இதுவென்றும் ஒரே நேரத்தில் அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பது முடியாத காரியமென்றும் பிரதியமைச்சர் நளின்  பண்டார தெரிவித்துள்ளார்.

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .