2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கடனின் சில பகுதியை முதலீடாகக் கோரியுள்ளோம்: ஹக்கீம்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன்

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரியளவான கடன் தொகையின் சில பகுதியை முதலீடாக மாற்றுமாறு சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

'இலங்கை அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் பாரியளவான கடன் தொகையினை வழங்கியுள்ளது. அவற்றினைக் கடனாகக் கருதி, திருப்பிச் செலுத்த வேண்டுமானால் பாரிய நட்டம் ஏற்படும். ஆகையினால் அக்கடன் தொகையின் சில பகுதியை இலங்கைக்கான முதலீடாக மாற்றுமாறு சீன பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரியுள்ளோம்.

எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே, இதுதொடர்பிலுள்ள சட்டச் சிக்கல்கள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது' என, அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X