S.Renuka / 2026 மார்ச் 16 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது நிலவிவருத் கடும் வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை 16ஆம் திகதி வெப்பச் சுட்டியானது மனித உடலில் உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில், காணப்படும் எனவும் இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.
அதிக வெப்பமான சந்தர்ப்பங்களில் அதிகளவு நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் சிறுவர்கள் வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago