2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கடலுக்குள் கழிவுகளை கொட்டுவதில் நாட்டுக்கு 5ஆவது இடம்

Thipaan   / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலுக்குள் பிளாஸ்டிக் உள்ளிட்ட திண்மக் கழிவுகளை கொட்டுகின்ற 20 நாடுகளுக்குள், ஐந்தாவது இடத்தில் இலங்கை உள்ளது என்று இன்டர்நஷனல் பிஸ்னஸ் டைம்ஸ் சஞ்சிகை ஆய்வின் ஊடாக அம்பலமாகியுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுற்றுச்சூழல்வாதியான ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் உள்ள 192 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படியிலேயே பிளாஸ்டிக் மற்றும் திண்மக் கழிவுகளை ஆகக்கூடுதலாக கொட்டுகின்ற 20 நாடுகளை அச்சஞ்சிகை பெயரிட்டுள்ளது.

அதனடிப்படையில், முதலாவதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து முறையே இந்தோனேஷியா, பிலிப்பீன், வியட்னாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.

வருடமொன்றுக்கு 1.59 மெற்றிக்தொன் நிறைகொண்ட பிளாஸ்டிக் மற்றும் திண்மக் கழிவுகளை கடலுக்குள் இலங்கை கொட்டுக்கின்றது.

அந்தச் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் இலங்கையில் ஒவ்வொரு நபரும் நாளொன்றுக்கு 5.1 கிலோகிராம் நிறைகொண்ட குப்பைகளை சுற்றுச்சூழலுக்குள் வெளியேற்றிவிடுகின்றார். அதில் 300 கிராம் பிளாஸ்டிக்கும் அடங்குகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X