Janu / 2026 மே 04 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று கரை திரும்பாத இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில், கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும், ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையே கரை திரும்பியிருக்க வேண்டும். இருப்பினும், நீண்ட நேரமாகியும் மீனவர்களும் அவர்களது படகும் கரை திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த உறவினர்களும் சக மீனவர்களும் இணைந்து, நான்கு படகுகளில் கடலுக்குச் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். எனினும், முதற்கட்டத் தேடுதலில் அவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (04) காலை மீண்டும் மீனவர்கள் பல படகுகளில் சென்று தீவிரத் தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர். அப்போது, இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
சண்முகம் தவசீலன்

33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago