2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கடும் நெருக்கடியில் எரிபொருள் இறக்குமதி

Freelancer   / 2021 டிசெம்பர் 18 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 42 கோடி அமெரிக்க டொலரை (சுமார் 8,610 கோடி ரூபா) பெற்றுக்கொள்ள முடியாமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பணத்தை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கோரியிருந்த போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் ரூபாவை தேடிக்கொள்ள முடியும் என்றாலும் டொலரை தேட முடியாது எனவும் இந்த நிலையில் எரிபொருள் இறக்குமதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் சுமார் 370 கோடி அமெரிக்க டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை வங்கிக்கு சுமார் 196 கோடி அமெரிக்க டொலர்களையும், மக்கள் வங்கிக்கு சுமார் 176 கோடி அமெரிக்க டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .