2025 ஜூன் 18, புதன்கிழமை

கட்சி ஆதரவாளர்கள் மோதல்; நால்வர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மீராவோடை பகுதியில் வைத்து இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே நேற்று மாலை (5)  இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இச்சம்பவத்தில் நால்வர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .