Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுகஸ்தோட்டை நகரில் போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது மிகவும் பயங்கரமான நிலையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த போதைப் பொருள் வர்த்தகத்தால் நாட்டின் எதிர்கால சந்ததியே அழிவை எதிர்நோக்கியுள்ளனரென்றும், ஜஸ் எனப்படும் போதைப்பொருள் கட்டுகஸ்தோட்டையில் சில மருந்தகங்களில் கொள்வனவு செய்யமுடியுமென்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் நாள்களில் பொலிஸ் விசேட படையணியினர் குறித்த பிரதேசத்துக்கு இணைவாக சேவையாற்றுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago