2025 மே 01, வியாழக்கிழமை

கட்டுப்பாட்டாளர்களை கட்டுப்படுத்திய வைரஸ்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்தின் நிர்வாகத்தை பிரதி போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் உதவி போக்குவரத்து அத்தியட்சகர் ஆகியோர் எடுத்துள்ளனர் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவியதால், கட்டுப்பாட்டாளர்கள், இன்றையதினம் கடமைக்கு சமுமளிக்காததையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஐந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இருப்பினும், ரயில்கள் எந்த தாமதமும் இல்லாமல் இயங்குவதை உறுதி செய்வதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .