Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 20 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுவை விரைவில் நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.
கண்காணிப்புக் குழுவுக்காக ஒவ்வொரு கட்சிகளிலிலும் இருந்து தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாரை நியமிப்பது என்பதை, அந்தந்தக் கட்சிகளே தீர்மானிக்கவேண்டும். இந்த கண்காணிப்புக் குழுவுக்கு, அமைச்சுகளின் சகல செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கு அனுமதியளிக்கப்படும்.
அமைச்சுகளில் இடம்பெறுகின்ற பல்வேறான ஒழுக்கற்ற செயற்பாடுகளையும், இந்த கண்காணிப்புக் குழு கண்காணிக்கும்.
கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கவேண்டிய, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலும், இதுவரையிலும் தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .