2024 ஜூன் 17, திங்கட்கிழமை

கணவனின் மது கோப்பையில் விஷம் கலந்த மனைவி கைது

Editorial   / 2024 மே 25 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவனின் மது கோப்பையில் விஷம் கலந்து படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவியும் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயும் (45 வயது), அவருக்கு ஆதரவாக இருந்த அவரது சகோதரரும் இன்று (25) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை ஊற்றி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் கணவர் கடந்த 20ஆம் திகதி தனது வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X