Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Janu / 2024 ஜூலை 18 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிரத்தியேக வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்து வடமத்திய தலைமை அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன, மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து பிராந்தியப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகிய அனைவருக்கும் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் சில அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை பாடசாலை நேரத்தில் , பாடசாலை நேரம் முடிந்ததும் அல்லது வார இறுதி நாட்களில் நடத்துவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் வந்துள்ளன .
சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் கற்பித்தல் பணியை முறையாக செய்யாததுடன், தங்களின் தனிப்பட்ட பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத மாணவர்களை அலட்சியப்படுத்துவதுடன், பல்வேறு துன்பங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிப்பதும், பாடசாலை நேரத்திலோ, பாடசாலை நேரத்திற்குப் பின்னரோ அல்லது வார இறுதி நாட்களிலோ தனியார் பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago