Editorial / 2025 ஜூலை 04 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகம, படுவத்தே பகுதியில் நேற்று (3) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான அமி உபுல் என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முச்சக்கர வண்டியில் வந்து படுவத்தே கிராமப்புற மேம்பாட்டு சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் இருந்த ஒரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பின்னர் தப்பிச் சென்றனர்.
படுவத்தேயைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணைகளில், அமி உபுல் குற்றச் செயல்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
ராகம பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
17 minute ago
26 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
41 minute ago
2 hours ago