2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கதிகாவத் சட்டமூலத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல்

Kanagaraj   / 2016 ஜனவரி 18 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் சட்டமூலத்துக்கு எதிராக பிவித்துரு ஹெல உறுமய, உயர்நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (18) மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஒழுக்கவிதிகளை மீறும் பௌத்த தேரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இந்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பௌத்த பிக்குகளைக்கட்டுப்படுத்த மதகுருக்கள் அல்லாதவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் விரும்பினால், கருத்துக் கணிப்போ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ நடத்தப்பட வேண்டும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சங்கத்துக்கான சட்டங்களை புத்தர் மட்டுமே ஆக்கமுடியும் எனத் தெரிவித்த அவர், யாராவது ஒரு பிக்கு துர்நடத்தையில் ஈடுபட்டால் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை, மஹாநாயக்கர்களுக்கு உண்டு எனத் தெரிவித்தார்.
காவியுடையில்லாத நிலையில், பிக்குகளுக்கெதிராக சாதாரண சட்டம் பாவிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மாஹாநாயக்கர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதைத் தாம் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X