2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

Janu   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி  மற்றும் மனைவிக்கு எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 08  ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்று திங்கட்கிழமை (25)  உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை  (18) மாலை  அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை பகுதியில் கல்முனை காதி நீதிமன்ற  நீதிபதியின்  வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து  இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும்  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் செவ்வாய்க்கிழமை (19) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். திங்கட்கிழமை (25) கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் செயலினால் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட   நபர்  ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் முறைப்பாடு ஒன்றை   மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்பவ  தினமன்று மாறுவேடத்தில்  மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின்  வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில்   காத்திருந்து  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள்    நீதிபதி மற்றும் மனைவியை  கைது செய்திருந்தனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X