2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கந்தானை துப்பாக்கிச் சூடு: மங்களவின் செயலாளருக்கு காயம்

Editorial   / 2025 ஜூலை 03 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானை பொதுச் சந்தைக்கு முன்பாக வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உபாலி குலவர்தன (வயது 50) உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சொகுசு காரில் பயணித்த குழுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கடைக்காரர் மற்றும் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்க்க முயன்றபோது காரில் மோதிய மற்றொரு நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் என்றும் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .