Janu / 2024 ஜூலை 31 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்
கனடா செல்வதற்கு தயாராக இருந்த இந்த இளைஞன், சுமார் இருபது இலட்சம் ரூபாய் பணத்துடன் யோக புரத்தில் திங்கட்கிழமை (29) இரவு பாண்டியன் குளம் சென்றிருந்தார்.
எனினும், அவரை காணவில்லை. உறவினர்கள் அவரை தேடிய நிலையில் வவுனிக்குளம் குளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். ஏச் .மக்ரூன்ஸ், சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றது. உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையைமுன்னெடுத்து வருகிறார்கள்.
சண்முகம் தவசீலன்

36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago