2025 ஜூலை 16, புதன்கிழமை

‘கனவில் கூட மஹிந்தவுடன் அரசியல் செய்யமாட்டேன்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்தவுடன் இணைந்து அரசியல் செய்வதை கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டேன் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் ஆட்சியை அன்று தொடக்கம் தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர தோழனும் இல்லை என்று தெரிவித்தாலும், ராஜபக்ஸர்களின் ஊழல் அரசியலுடன் இணைந்து தான் செயற்படப் போவதில்லை என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு, போதை வர்த்தகர்கள், குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்த போது, எவரும் கவனத்திற்கொள்ளாவிட்டாலும், இன்று அவை உண்மையாகி வருவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் பொன்சேகா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .