2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கப்பல் சேவையை விரைவுபடுத்தவும்

Freelancer   / 2023 மே 08 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லம்பேட்

தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில்  மன்னார் மாவட்டம்  எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை  இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்ட காணொளி அடங்கிய இறுவெட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி அ.ஸ்ரான்லி டிமெல்லிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
 
மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.  ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் உருவாக்கப்பட்ட குறித்த காணொளி,  திங்கட்கிழமை (08) காலை 9.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ்  நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு  மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோருக்கும் வழங்கும் வகையில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய நூல்களின் பிரகாரம் ஆதிகாலத்தில்  பொருளாதாரத்திலும் வாழ்வியலிலும் மிகச் சிறப்பாக விளங்கிய மன்னார் மாவட்டம் தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியுற்று பின்தங்கிய மாவட்டமாக காணப்படுவதற்கு காரணங்கள் என்ன என்பதை  ஆய்வு செய்து  அவற்றை காணொளியாக தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பண்டைய காலத்தில் துறைமுக செயல்பாடு, வியாபார நடவடிக்கைகள் மூலம் சிறப்பான பொருளாதாரத்தில் இருந்த மன்னார் மாவட்டம் துறைமுக செயல்பாடுகள் நிறுத்தப் பட்டதன் பின்  இவ்வாறு பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது என்ற உண்மை கண்டறியப்பட்டு ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதே இலக்கிய நூல்களின் ஆதாரத்துடன் மன்னார் கட்டுக்கரை பகுதி பழங்காலத்தில் பாரிய வரலாற்று வியாபார பண்பாட்டுப் பெருநகரம் பெருநகரமாக இருந்துள்ளது என்பதும் கூறப்பட்டுள்ளது .

மேலும் இந்த காணொளிக்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் மாவட்டம் பண்டைய காலத்தில்  இருந்ததைப் போன்று  பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வியாபார நகரமாக மாறுவதற்காக மீண்டும் தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையில் முன்பு இருந்ததைப் போன்று கப்பல் சேவை ஒன்றை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் வலுவான துறைமுகம் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டால்  மன்னார் மாவட்டம் பொருளாதாரத்திலும் வாழ்வியலிலும் உணர்ச்சியடையும் என்று பல முக்கிய பிரமுகர்களும்  தங்களது கோரிக்கைகளை காணொளிகளாக  பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் மன்னார் மாவட்டதில் சிறந்த தொழில் முயற்சியாளர்களும் உற்பத்தியாளர்களும்   காணப்படுகின்ற போதும்  அவர்களுக்கான சந்தை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தொழில் முயற்சிகளை கைவிட்டு  வேறு வேலைகளில் கவனம்  செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமது உற்பத்திப் பொருட்களை நாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பனை செய்வதற்கு  தலைமன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையிலான கப்பல் சேவை மிகவும் அவசியம் என்றும்  உற்பத்தியாளர்களும்  தொழில் முயற்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .