Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து குறித்து மேலதிக செய்திகள் வெளியாகி உள்ளன.
குறித்த வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீதியின் ஓரத்தில் பயணித்த பெண்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதோடு, அங்கு பயணித்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
இதனை அடுத்து லொறியும் அந்த பெண்கள் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 67 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கு காரணமான காரை 36 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தியுள்ளார். அவர் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை கொண்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பெண் தமது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு வந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் கணவர் தமது மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விகாரைக்கு அருகில் பயணித்த போது அந்த பெண் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக Accelerator ஐ அழுத்தியுள்ளார்
இதனால் கார் வேகமாக சென்று வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியிலும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். R
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago