2025 ஜூலை 05, சனிக்கிழமை

கம்பெரலிய வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம்

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ‘கம்பெரலிய’ கிராமிய வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் போது, அதிகமாக விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை ஒரு தேர்தல் தொகுதிக்காக கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாய்க்கு பதிலாக இந்த வருடத்திலிருந்து 300 மில்லியன் ரூபாயை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இந்த வருடத்துக்குள் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக 48000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்தாண்டு ஜுலை மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த கம்பெரலிய கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டமானது நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை​மைகளால் கடந்தாண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் கம்பெரலிய வேலைத்திட்டத்தை மீ்ண்டும் ஆரம்பிக்க நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .