2025 மே 17, சனிக்கிழமை

கரையோரப் பாதுகாப்புக்கு விசேட வேலைத்திட்டம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரையோரப் பாதுகாப்புக்கான விசேட வேலைத்திட்டமொன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதன்கிழமை (26) தெரிவித்தார். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்குள்ள பணியாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இது வரையில் திணைக்களம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, கரையோரப் பாதுகாப்பு தொடர்பில் எழுகின்ற பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.

கரையோரங்களை வளப்படுத்திப் பேணும் கருத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதையும் அதற்கு தாக்கம் செலுத்தும் சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுவதற்கு பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.கே. பிரபாத் சந்திரசிறி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .