2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

கார், வேனுடன் மோதிய ஓட்டோ: ஒருவர் பலி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் பத்துளு ஓயா பாலத்தில் செவ்வாய்க்கிழமை (14) அன்று இரவு முச்சக்கர வண்டி ஒன்று அதிக மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் கொழும்பு மற்றும் புத்தளம் ஆகிய திசைகளில் இருந்து வந்த கார் மற்றும் வேனுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்ததுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கார் மற்றும் வேன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .