2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

கர்தினாலின் குற்றச்சாட்டுகளை மறுத்தார் கோட்டா

Freelancer   / 2024 ஏப்ரல் 26 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு என்னிடம் கையளிக்கப்பட்ட மறுநாள் நான் கர்தினால்மல்கம் ரஞ்சித்தைதொடர்புகொண்டேன் என கர்தினால் தெரிவித்துள்ளார் ஆனால் நான் அந்தஅறிக்கைசமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கர்தினாலை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவேயில்லை என கோட்டாபய தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகத்தினர் எனக்கு வாக்களிக்கவில்லை என்னை ஆதரிக்கவில்லை என்பது நன்கு தெரிந்த விடயம் இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  தடைசெய்யப்படவேண்டிய எந்த அமைப்பிலும் நான் ஏன் ஆதரவாளர்களை வைத்திருக்கவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2021 ம் ஆண்டு பெப்ரவரிமுதலாம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டது நான் அதனை ஆராய்ந்த பின்னர் சட்டமாஅதிபரிடம் பாரப்படுத்தினேன் 2021 பெப்ரவரி 23ம் திகதி அது   சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது மார்ச் முதலாம் திகதி அதன் பிரதிகள் பௌத்த கர்தினால் மற்றும் கத்தோலிக்க ஆயர்களிற்கு கையளிக்கப்பட்டது எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நான் ஆறுபேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவை நியமித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X