Editorial / 2025 நவம்பர் 25 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீரிகம பகுதியில் பணியாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் ஐஸ் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஹலுகமவில் கைது செய்யப்பட்டதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீரிகம, நெலிகம பகுதியைச் சேர்ந்தவர்.
மீரிகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் பேரில் திங்கட்கிழமை(24) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கிராம சேவையாளரிடமிருந்து ஐஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர், செவ்வாய்க்கிழமை (25) ஆம் திகதி அன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
6 minute ago
19 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
23 minute ago
30 minute ago