2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

கிராம சேவையாளர்களுக்கான நியமனம் நாளை

Freelancer   / 2024 மே 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் நேற்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் அந்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாளை காலை 10.30 மணிக்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் இந்த  நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X