2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கரூர் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு

Editorial   / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் குறித்து வதந்தி பரப்​பிய​தாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்பட்டுள்ளது. பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் வலை​தளங்களில் பதி​விடு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் எச்சரித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான காணொலிகள் பரவி வரு​கின்​றன. இதில் போலியான, ஜோடிக்​கப்​பட்ட காணொலி​களும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது​போன்ற பொய் செய்​தி​களை பரப்ப வேண்​டாம் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இந்​நிலை​யில், சென்னை காவல் ஆணை​யர் அருண் நேற்று ஒரு செய்​திக்​குறிப்பு வெளி​யிட்​டுள்​ளார். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரூரில் நடை​பெற்ற அரசி​யல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் எவ்​வித வதந்​தி​யை​யும் பரப்ப வேண்​டாம். விசா​ரணை அடிப்​படை​யில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலை​யில், வலை​தளங்​களில் சிலர் பரப்​பும் பொய் செய்​தி​கள் பொது​மக்​கள் அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் அமை​கிறது.

இதுதொடர்​பாக பெறப்​பட்ட புகார்​களின்​பேரில், பொது வெளி​யில் வதந்தி பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் செய்திகளை பதிவு செய்த வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X