2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணித் தாய்மாருக்கும் கொரோனா தடுப்பூசி

Freelancer   / 2021 ஜூலை 12 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 வயதுக்கு மேற்பட்ட மூன்று மாதங்களைக் கடந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மாருக்கும் கொவிட் 19 தடுப்பூசி வழங்குமாறு அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த சுகாதாரப் பணிப்பாளர்களுக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

போதியளவான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டிருப்பதாலும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள பொதுமக்கள் அணுகுவதாலும் இந்த முடிவை அமைச்சு எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கர்ப்பிணித் தாய்மாரின் சம்மதத்துடனேயே ஊசி ஏற்றப்பட வேண்டும் என தொற்றும் நோய்களுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .