2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கலஹாவில் 4 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றி, விடுமுறைக்காக தமது சொந்த இடமான கலஹாவுக்கு வந்த 4 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சுயதனிமைக்குள்ளாகுமாறு, சுகாதார அதிகாரிகள், கலஹா பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


குறித்த நான்கு கடற்படை வீரர்களும் முரபொலபெமிய, வாடியகொட கிராமங்களைச் சேர்ந்தர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த கடற்படை வீரர்களுள் ஒரு வீரரின் மனைவி கடமையாற்றிய நவனெலிய உப தபால் அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.


இதேவேளை குறித்த கடற்படை சிப்பாய்கள் நால்வருக்கும் நாளை பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X