2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் தோட்டாக்கள் மீட்பு

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில் வியாழக்கிழமை (07) அன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிகளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேகத்திற்கிடமாக தோட்டாக்கள் அதிகளவு சிதறி காணப்பட்டதுடன் அதனை அவதானித்த பாடசாலை சமூகம்உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர். 

அதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்தபொலிஸார் இராணுவம் சிதறிகாணப்பட்ட தோட்டாக்களை மீட்கும் பணியினை பாதுகாப்பான முறையில் மேற்கொண்டு உள்ளனர்  தொடர்ந்து 11மணியளவில் 150ற்குமேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .